வெள்ளை மாளிகை, ஒரு தமிழனை கௌரவிப்பதன் உண்மைக் காரணம் என்ன?

Prof. Sivalingam Sivananthan

Prof. Sivalingam Sivananthan

Get the SBS Audio app

Other ways to listen

அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம்பெயர் தொழில்முனைவர்களுக்கும், புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் வெள்ளை மாளிகை விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். இதற்கமைய, இருளை ஊடுருவிப் பார்க்கக்கூடிய (Night Vision) தொழில்நுட்பத்தை மேம்படுத்தியமைத்த பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதனுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.


இலினொய்ஸ் மாநிலத்தில் சிவநாதன் லெபோரட்டரிஸ் என்ற அமைப்பை நடத்தி வரும் பேராசிரியர் சிவநாதன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அவரது நிறுவனம் அகச்சிவப்புக்கதிர் தொழில்நுட்பம், கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தல், உயிரியல் உணர்கருவிகள் முதலான துறைகளில் ஆய்வு செய்து வருகிறது. சூரிய மின்வலு உற்பத்தியின் அடுத்த படிமுறையை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

ஊடகங்கள் பல, இவரது செயற்பாட்டைத் தவறான தரவுகளுடன் வெளியிட்டிருந்தன. அவற்றின் உண்மையை, குலசேகரம் சஞ்சயனுடன் நீண்ட உரையாடலில் தெளிவாக விளக்குகிறார் பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன்.

இந்த நேர்காணல் 2013ஆம் ஆண்டு முன்னர் ஒலிபரப்பானது. அதன் மறு ஒலிபரப்பு இது.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share